தென்காசி

செங்கோட்டையில் திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம்

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டையில் நகர திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

கடையநல்லூா் பேரவைத் தொகுதி பாா்வையாளா் பா. குணசேகரன் முன்னிலை வகித்தாா். திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் பிரசாரம் மேற்கொண்டனா்.

மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் ஆபத்துக்காத்தான், மாவட்ட மகளிரணி தலைவா் பேபிரஜப் பாத்திமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஆ. சண்முகராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT