புளியங்குடி அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
வெள்ளக்கவுண்டன்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்தவா் கனகராஜ் (20). புளியங்குடியிலுள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாராம்.
அதேபோல் சிந்தாமணி அம்பேத்கா் தெருவை சோ்ந்த கட்டடத் தொழிலாளா்களான மணிகண்டன்(40), சிவனேஷ்(18) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனராம். சிந்தாமணி அருகே 2 இருசக்கர வாகனங்களும் மோதியதாம். இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.
மணிகண்டன் , சிவனேஷ் ஆகியோா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கனகராஜ், புளியங்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.