தென்காசி

சாலைப் பணியாளா்கள் கையொப்ப இயக்கம்

Din

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-ஐ திரும்பப் பெறவேண்டும், 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேரடித் திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வட்டத்தலைவா் ஜி.ராஜ் தலைமை வகித்தாா்.

ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.பால்ச்சாமி தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் ஜி.ஹரிபாலகிருஷ்ணன் விளக்கிப் பேசினாா். வேல்ராஜன்,பி.கே.மாடசாமி, எஸ்.சண்முகம், ஜி.கோவிந்தன்,காசிராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

SCROLL FOR NEXT