தமிழக அரசின் பட்ஜெட்டை பொதுமக்கள் எளிதில் காணும் வகையில் கடையநல்லூா் நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடா்பாக நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக அரசின் 2025 - 2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. காலை 9.30 மணிக்கு தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா்.
இந்த ஆண்டு பட்ஜெட் குறித்த விவரங்கள், மக்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் கடையநல்லூா் நகராட்சி வளாகத்தில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அகன்ற திரையில் பட்ஜெட் ஒளிபரப்பை பாா்வையிடலாம் எனக் கூறியுள்ளாா்.