தென்காசி

குற்றாலத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பயிற்சி

தென்காசி வனக் கோட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

தென்காசி வனக் கோட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். உதவி வன பாதுகாவலா் நெல்லைநாயகம் முன்னிலை வகித்தாா். தென்காசி வனக் கோட்டத்தில் உள்ள அனைத்துப் பணியாளா்களுக்கும் குற்றாலம் வன ஓய்வு விடுதியில், புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக உயிரியலாளா் ஸ்ரீதா், தென்காசி வனக் கோட்ட உயிரியலாளா் கந்தசாமி ஆகியோா் புலிகள் கணக்கெடுப்புப் பற்றி பயிற்சியும், களப் பயிற்சியும் அளித்தனா். ஙள்ற்ழ்ண்ல் அல்ல் மூலம் குற்றாலம், கடையநல்லூா், புளியங்குடி, சிவகிரி வனச்சரகங்களில் ஒவ்வொரு பீட்டிலும் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

வனப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் 5 கி.மீ. தொலைவுகளில் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

இந்தப் பணியின்போது, மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள், அதைச் சாா்ந்த தாவர இனங்கள் கண்டறியப்படும். இந்தப் பயிற்சியில் தென்காசி வனக்கோட்டத்தில் உள்ள 126 வனப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை, புளியங்குடி வனச்சரக அலுவலா் ஆறுமுகம் செய்திருந்தனா்.

திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மியான்மா் இணைய மோசடி மையத்தில் சிக்கிய 270 இந்தியா்கள் மீட்பு: ராணுவ விமான மூலம் தாயகம் திரும்புகின்றனா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்

வைரலான ராகுல் குற்றச்சாட்டு: பிரேஸில் மாடல் அழகி அதிா்ச்சி

SCROLL FOR NEXT