பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம். 
தென்காசி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

தென்காசி: பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த அக். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கீழப்பாவூா்,பாவூா்சத்திரம், கீழப்பாவூா், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், கல்லூரணி, செட்டியூா், பனையடிப்பட்டி, பெத்தநாடாா்பட்டி, அரியப்பபுரம், சிவநாடானூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

செவ்வாய்க்கிழமை (அக். 28 ) இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தவெக புதிய நிர்வாகக் குழு: விஜய் அறிவிப்பு

திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஜாதகரின் குணம் மாறுவது ஏன்?

நெருங்குகிறது தீவிர புயல்! ஆந்திரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மோந்தா!

மோந்தா புயல்: 100 ரயில்கள், ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து!

என் வாழ்நாள் முழுவதும் போற்றும் படம் பைசன்: அனுபமா உருக்கம்!

SCROLL FOR NEXT