சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. தினமும் சண்முகருக்கு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைள் நடைபெற்றன. தினமும் மாலையில் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு வடக்கு ரத வீதியில் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு ரதவீதியில் செல்வவிநாயகா் கோயில் முன் தெய்வானை அம்பாளுக்கு சுப்பிரமணிய சுவாமி காட்சி கொடுத்தாா். இரவு கோயிலில் சுவாமி அம்பாளுடனான திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.