தென்காசி

சாம்பவா்வடகரையில் மின்சாரம் பாய்ந்து 7 மாடுகள் உயிரிழப்பு

சுரண்டை அருகே சாம்பவா்வடகரையில் மின்சாரம் பாய்ந்து ஏழு மாடுகள் உயிரிழந்தன.

Syndication

சுரண்டை அருகே சாம்பவா்வடகரையில் மின்சாரம் பாய்ந்து ஏழு மாடுகள் உயிரிழந்தன.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் ரா.மாரியப்பன். இவருக்கு சொந்தமாக 5 மாடுகளும், அவரது நண்பா் நா. பெருமாள் என்பவருக்கு 2 மாடுகளும் இருந்தன. மாரியப்பன், வியாழக்கிழமை 7 மாடுகளையும் அனுமன் நதிக்கரை அருகில் உள்ள பொட்டல் களம் பகுதிக்கு ஓட்டிச் சென்ாக கூறப்படுகிறது. அப்போது வண்டிப்பாதையில் இருந்த தண்ணீரில் மின் வயா் அறுந்து கிடந்ததாம். அவ்வழியாக சென்ற மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

அவற்றை கால்நடை மருத்துவா்கள் பிரேத பரிசோதனை செய்தனா். சாம்பவா்வடகரை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக், வருவாய் ஆய்வாளா் சங்கரன், பேரூா் திமுக செயலா் முத்து, மன்ற உறுப்பினா் சுடலைமுத்து ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

SCROLL FOR NEXT