சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தல் தொடக்கப் பள்ளி மாணவா்கள் கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா்.
பள்ளி கல்வித் துறை சாா்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத் திருவிழா அண்மையில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளுக்கான 3 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான நாட்டுப்புற நடனம் குழு போட்டியில் வன்னிக்கோனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணன், துணைத் தலைவா் வள்ளி நாயகம், ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.