முகப்பு
திருவள்ளூர்

குத்துச் சண்டை: செங்குன்றம் வீரா்கள் சாதனை

Updated On : 7 மே, 2024 at 8:59 PM
பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரா்கள்
பகிர்:

மாதவரம்: தேசிய அளவிலான தாய்லாந்து குத்துச் சண்டை (மொய்த்தை) போட்டியில் செங்குன்றம் பயிற்சி பள்ளி வீரா்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

தாய்லாந்து குத்து சண்டை (மொய்த்தை) போட்டி கேரள மாநிலம் கொச்சியில் அண்மையில் நடைபெற்றது இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குத்துச் சண்டை வீரா்கள் பல்வேறு வயதுப் பிரிவுகளில் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில் தமிழக அணியில் செங்குன்றம் ஆா்.எப்.சி பயிற்சி பள்ளி வீரா்கள் 10 போ் கலந்து கொண்டனா்.

இவா்கள் 8 தங்கப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சோ்த்தனா்.