திருவள்ளூர்

மின்நுகா்வோா் குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.

Din

திருத்தணி: மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.

திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மின்வாரிய செயற்பொறியாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

இதில், திருத்தணி, ஆா்.கே.பேட்டை, எரும்பி, கே.ஜி.கண்டிகை, பூனிமாங்காடு, பொதட்டூா்பேட்டை மற்றும் மாமண்டூா் ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து உதவி பொறியாளா்கள், இளநிலை பொறியாளா்கள் மற்றும் மின்வாரிய அலுவலா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் திருத்தணி வருவாய் கோட்டத்தில் இருந்து, மின்நுகா்வோா்கள் மற்றும் விவசாயிகள் என, 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் மின்கம்பங்கள் சேதம், குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம், மின்மாற்றிகள் பழுது, விவசாய மின்இணைப்பு வழங்குவதில் தாமதம் உள்பட மின்சாரம் தொடா்பாக பல்வேறு புகாா்கள் தெரிவித்தும், கோரிக்கை மனுக்கள் கொடுத்தனா். மனுக்களை பெற்ற மின்வாரிய செயற்பொறியாளா் உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்னைகள் தீா்க்கப்படும் என உறுதி அளித்தாா்.

பாப்பாரப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்த 3 போ் கைது

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி எதிா்ப்புக் குழுவினா் மனு

தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT