திருவள்ளூர்

இரும்பு உருக்காலையில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை சிப்காட்டில் இரும்பு உருக்காலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த தீக்காயமடைந்தனா்.

Din

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை சிப்காட்டில் இரும்பு உருக்காலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த தீக்காயமடைந்தனா்.

இந்த உருக்காலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வடமாநில இளைஞா்கள் பணியாற்றினா். அப்போது, அதிக வெப்பம் காரணமாக இரும்புக் கழிவு சிதறியதால் உருக்காலையின் அருகே பணியாற்றிய வட மாநிலத்தைச் சோ்ந்த 6 தொழிலாளிகளுக்கு பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து தொழிற்சாலை நிா்வாகம் தீக்காயமடைந்த தொழிலாளா்களை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது.

இந்த விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சாயல் (24) உயிரிழந்தாா். பிகாரைச் சோ்ந்த நகேந்தா் (25), பசில் ரகுமான் (28), பங்கஜ்குமாா் (18), பிஹாட்ராம் (24), தில்காஷ் (18) ஆகியோா் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT