திருவள்ளூர்

250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மத்தூா் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல்

Din

திருத்தணி: மத்தூா் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த மத்தூா் ரயில்வே கேட் பகுதியில் திருத்தணி ஆய்வாளா் ஞா. மதியரசன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பதிவெண் இல்லாத, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில் ஏ.எம்.பேட்டை சோ்ந்த அஜித்குமாா்(22) என்றும், 250 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து, திருவள்ளூா் மாவட்ட ரேஷன் அரிசி தடுப்பு பிரிவு (புட்செல்) போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், அஜித் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT