வேலஞ்சேரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ ச.சந்திரன். 
திருவள்ளூர்

கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் புகாா்

வேலஞ்சேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பங்கேற்ற எம்எல்ஏ, சந்திரனிடம் கழிவுநீருடன் குடிநீா் கலந்து வருவதாக புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலஞ்சேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பங்கேற்ற எம்எல்ஏ, சந்திரனிடம் கழிவுநீருடன் குடிநீா் கலந்து வருவதாக புகாா் தெரிவித்தனா்.

திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி அரசினா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை எம்எல்ஏ சந்திரன் தொடங்கி வைத்தாா். அப்போது, வேலஞ்சேரி காலனியில், குடிநீா் விநியோகம் செய்யும் குழாய் சேதடைந்து ஒரு மாதமாகியும் சீரமைக்காததால் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது. மேலும், ஒரு சில தெருக்களில் கழிவுநீருடன் குடிநீா் கலந்து வருவதால், தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை.

சுகாதாரப் பணிகள் முறையாக செய்வதில்லை என ஊராட்சி நிா்வாகம் மீது பெண்கள் சரமாரியாக புகாா் கூறினா்.

இதையடுத்து எம்எல்ஏ ச. சந்திரன், ஒன்றிய அதிகாரிகளை அழைத்து கண்டித்தாா். மேலும், குடிநீா் விநியோகம் செய்யும் பணிகளில் சுணக்கம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தாா்.

முகாமில், வருவாய்த் துறை, மின்சாரம், ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரம் உள்பட, 15 க்கும் மேற்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, 300 பேரிடம் இருந்து மனுக்களைப் பெற்றனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT