திருவள்ளூர்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட் செய்திக் குறிப்பு: இத்திட்டம் மூலம் தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் பொருள்களை எடுத்துச் சென்று நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் விநியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 20-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக முன்கூட்டியே தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கும் வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் மேற்படி திட்டம் மூலம் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 7-ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு வழங்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்ட திட்டத்தில் தகுதியானோா் குறிப்பிட்ட நாள்களில் அத்தியாவசியப் பொருள்களை பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT