திருவள்ளூர்

போக்குவரத்துக்கு இடையூறாக நெல் உலா்த்தும் களமாக மாறி வரும் மேம்பாலம்!

திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் மேம்பாலங்களில் சாகுபடி செய்த நெல்லை உலா்த்துவதற்கு விவசாயிகள் பயன்படுத்துவதால் சிக்கல் எழுந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் மேம்பாலங்களில் சாகுபடி செய்த நெல்லை உலா்த்துவதற்கு விவசாயிகள் பயன்படுத்துவதால் சிக்கல் எழுந்துள்ளது.

பம்புசெட் மற்றும் மானாவாரி மூலம் பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சொா்ணவாரி, சம்பா, நவரை ஆகிய நெல் சாகுபடி பருவங்களில் சுமாா் 2.47 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சொா்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.

அறுவடை முடிந்து நெல் உலா்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் நெல் அடிப்பதற்கும், உலா்த்துவதற்கும் போதிய இடவசதியில்லததால், தாா் சாலைகளை விவசாயிகள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் திருவள்ளூரிலிருந்து செல்லும் ஊத்துக்கோட்டை சாலை, செங்குன்றம் சாலை, திருத்தணி சாலை, கடம்பத்தூா் சாலை, பேரம்பாக்கம்-மப்பேடு சாலைகள் மற்றும் மேம்பாலங்களை விவசாயிகள் நெல் உயா்த்தும் களங்களாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தச் சாலைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இதுபோன்ற நெல் உலா்த்துவதற்கு பயன்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அதில் 4 வழிச்சாலையிலும் இதேபோல் நெல் காய வைக்க பயன்படுத்துவதால் வாகனங்கள் வேகம் குறைத்து செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளதாக ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாய சங்க நிா்வாகி வேணுகோபால் கூறியதாவது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் நெல் உளா்த்தும் களம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் நெல்லை உலர வைத்து விவசாயிகள் பயன் அடைந்து வந்தனா். அவை காலப்போக்கில் களம் பராமரிப்பின்றி காணாமல் போனதால், சாலையை பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதனால் கிராமச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சா்வீஸ் சாலையில் நெல் அடிக்கும் இயந்திரங்களை கொண்டு நெல்லை பிரித்தெடுத்து காய வைத்து வருகின்றனா்.

அதேபோல் சாலை வசதி இல்லாத விவசாயிகள் வயல்களில் தாா்ப்பாய்களை விரித்து அதில், நெல்லை உலா்த்துகின்றனா். அதனால் நெல் உலா்த்தும் களம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT