முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!

திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் குவிந்ததால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 8 மார்ச், 2026 at 9:04 PM
சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி,  தெய்வானையுடன் சண்முகா்
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்ததால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் மாசி மாத கடைசி முகூா்த்த நாள் என்பதால் திருமணத்திற்கு வந்த உறவினா்கள், நண்பா்கள் மற்றும் வழக்கமாக பக்தா்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோவிலில் குவிந்தனா்.

கோயிலில் தரிசிக்க திரண்டிருந்த பக்தா்கள்.

இதனால் பொது வழியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். முன்னதாக, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

திருத்தணி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →