வணிகம்

டிஸ்க் பிரேக் வசதியுடன் யமஹாவின் "சிக்னஸ் ஆல்ஃபா'

யமஹாவின் "சிக்னஸ் ஆல்ஃபா' ஸ்கூட்டர் டிஸ்க் பிரேக் வசதியுடன் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

தினமணி

யமஹாவின் "சிக்னஸ் ஆல்ஃபா' ஸ்கூட்டர் டிஸ்க் பிரேக் வசதியுடன் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை & சந்தைப்படுத்தல்) ராய் குரியன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய சந்தைகளில் இருசக்கர வாகனப் பிரிவில் யமஹா நிறுவனம் நீடித்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்கூட்டருக்கான சந்தை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு "சிக்னஸ் ஆல்ஃபா' ஸ்கூட்டர் டிஸ்க் பிரேக் வசதியுடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

இதன் புது தில்லி விற்பனையக விலை ரூ.52,556-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் பாதுகாப்பான பயணத்தை அதிகரிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டே இந்தப் புதிய ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் வசதி அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் யமஹா நிறுவனம் மோட்டார் வாகன விற்பனையில் 10 சதவீத சந்தைப் பங்களிப்பை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது என்று ராய் குரியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளிப் பரிசு! விடுமுறை அறிவிப்பு!

குன்னூரில் மண்சரிவு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு!

தீபாவளி! 4,067 பேருந்துகள் இயக்கம் - இருநாள்களில் 3.5 லட்சம் பேர் பயணம்!

இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

SCROLL FOR NEXT