வணிகம்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு: தொடர்ந்து கடும் சரிவு 

சமீப காலமாக இல்லாத அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.    

DIN

மும்பை: சமீப காலமாக இல்லாத அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.    

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மைக்காலமாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அத்துடன் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் வர்த்தக கெடுபிடிகளாலும் சில நாட்களாக ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

அதேசமயம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு புதனன்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. நவம்பருக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் மிரட்டலின் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது. விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் ஏறக்கூடும் என்ற அச்சம் பொதுவாக ஏற்பட்டுள்ளது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழனன்று மேலும் சரிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. புதன்கிழமை அன்று அது 36 காசுகள் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. ஆனால் வியாழக்கிழமையான இன்று ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 69.10 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த சரிவு இதுவரை  வரலாற்றில் இல்லாத சரிவாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ 70 என்ற அபாயகரமான அளவுக்குச் செல்லக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT