வணிகம்

பொது சேமநல நிதி வட்டி விகிதம் 8%-ஆக உயர்வு

பொது சேமநல நிதி (ஜிபிஎஃப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

DIN


பொது சேமநல நிதி (ஜிபிஎஃப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரங்களுக்கான துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டின் ஜூலை-செப்டம்பருக்கான காலாண்டில் ஜிபிஎஃப்-க்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அக்டோபர்-
டிசம்பர் காலாண்டுக்கான இதன் வட்டி விகிதம் 0.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜிபிஎஃப் திட்டங்களில் சேமிக்கப்படும் தொகைக்கு வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான கால அளவில் 8 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே, பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோரின் சேமநல நிதி திட்டங்களுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.
சமீபத்தில் பிபிஎஃப் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் தொடர்ச்சியாக, ஜிபிஎஃப் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT