புதிதாக இரண்டு பிரிண்டர்களை அறிமுகப்படுத்தும் ' கேனான் இந்தியா' 
வணிகம்

புதிதாக இரண்டு பிரிண்டர்களை அறிமுகப்படுத்தும் ' கேனான் இந்தியா '

கேனான் இந்தியா  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

DIN

கேனான் இந்தியா  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

மாக்ஸிபை ஜிஎக்ஸ் 6070 மற்றும் மாக்ஸிபை ஜிஎக்ஸ் 7070 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய பிரிண்டர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக சிறிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது .

அறிமுக விலையாக ஜிஎக்ஸ் 6070 ரூ. 47,348 ஆகவும் ,  ஜிஎக்ஸ் 7070 ரூ. 58,621 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யாமஸாகி அளித்த தகவலில் "கைகளில் தூக்கக் கூடிய அளவே கொண்ட கேனான் பிரிண்டர்கள்  இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் விற்பனையிலும் முன்னேற்றத்தைக் கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை வளர்த்தது " எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தற்போது உருவாக்கப்பட்ட மாக்ஸிபை பிரிண்டர்கள் கடந்த தலைமுறை பிரிண்டர்களை விடவும்  தரத்திலும் தொழில்நுட்பத்திலும் மாற்றங்களைக் கொண்டு .அதிக எடையில்லாமல் சுலபமாக கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டதோடு நீண்ட கால உழைக்கும் திறனும் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்றும்  அச்சின் வண்ணமும் , தெளிவும் மிகச்சிறந்த துல்லியத்துடன் இருக்கிறது என்றும் கணினியில் இருந்தும் ஸ்மார்ட்போனிலிருந்தும்  பிரிண்டர்களை இயக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT