முகப்பு
வணிகம்

பங்குகளின் தொடர் வீழ்ச்சி: இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

பங்குகளின் தொடர் வீழ்ச்சியால் இன்று பங்குச் சந்தை இறக்கத்தில் முடிந்தது.

Updated On : 14 டிசம்பர், 2021 at 4:43 PM
பங்குகளின் தொடர் வீழ்ச்சி: இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி
பகிர்:

பங்குகளின் தொடர் வீழ்ச்சியால் இன்று பங்குச் சந்தை இறக்கத்தில் முடிந்தது.

கடந்த சில வாரமாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வரும் பங்குச் சந்தை இந்த வாரத்திலும் அதே நிலையைக் கொண்டிருக்கிறு. 

இதனால்,  நேற்று(டிச.13) 58,283.42 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,059.76 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 166.33 புள்ளிகள் குறைந்து  58,117.09 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

Advertisement

17,368.25 புள்ளிகளில் நிறைவடைந்து 17,283.20 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 43.35 புள்ளிகள் குறைந்து 17,324.90 புள்ளிகளில் நிலைபெற்றது. 

மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தையில் நிஃப்டி பெரிய இழப்பைச் சந்திக்காமல் 17,300 புள்ளிகளில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.