சென்னையில் பெட்ரோல் விலை ரூ.90-ஐ நெருங்குகிறது
பெட்ரோல், டீசல் விலை நடப்பு வாரத்தில் நான்கு நாள்களாக மாற்றமின்றி நீடித்த நிலையில், இன்று 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நடப்பு வாரத்தில் நான்கு நாள்களாக மாற்றமின்றி நீடித்த நிலையில், இன்று 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.71-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ரூ.89.40-க்கு விற்பனையான நிலையில், இன்று 31 காசுகள் உயர்ந்து ரூ.89.71-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.82.66-க்கு விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலைகள் 35 காசுகள் உயர்ந்து, தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.87.30-ஆகவும், டீசல் ரூ.77.48 ஆகவும் உயர்ந்துள்ளது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.83-ஆகவும் ஒரு லிட்டர் டீசல் ரூ.84.36 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.63க்கும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.81.06-க்கும் விற்பனையாகிறது.
அதேபோன்று, தில்லியில் ஒரு லிட்டா் டீசல் விலை 75.88 ஆகவும், மும்பையில் ரூ.82.66-ஆகவும் அதிகரித்தது.
இந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் விற்பனை வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள்களின் விலையில் மாறுபாடு இருக்கும். இருப்பினும், தற்போதைய நிலையில் பெட்ரோல் டீசல் விலையானது இதுவரையில்லாத புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.