முகப்பு
வணிகம்

பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 397 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தன. முடிவில் சென்செக்ஸ் 397 புள்ளிகள் வரை உயர்ந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பங்குச்சந்தையில் ஏற்றம் நிறைவு: சென்செக்ஸ் 397 புள்ளிகள் உயர்வு
பகிர்:


பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தன. முடிவில் சென்செக்ஸ் 397 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 397.04 புள்ளிகள் உயர்ந்து 52,769.73 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.76 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119.75 புள்ளிகள் உயர்ந்து 15,812.35 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.76 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அதில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கி  பங்குகள் 2.83 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 2.67 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 2.28 சதவிகிதமும், சன் பார்மா 2.12 சதவிகிதமும் உயர்வுடன் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →