வணிகம்

பிஎச்இஎல் நிறுவனம்: இழப்பு ரூ.46 கோடியாக குறைவு

பொதுத் துறையைச் சோ்ந்த பொறியியல் கட்டுமான நிறுவனமான பிஎச்இஎல் இழப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.46 கோடியாக குறைந்துள்ளது.

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பொறியியல் கட்டுமான நிறுவனமான பிஎச்இஎல் இழப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.46 கோடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.5,197.25 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.3,793.13 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவு அதிகம்.

கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.552.38 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.46.58 கோடியாக மிகவும் குறைந்துள்ளதாக பிஎச்இஎல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

SCROLL FOR NEXT