வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு: சென்செக்ஸ் 1,170 புள்ளிகள் சரிந்தது

DIN

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை கடும் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,170.12  புள்ளிகள் சரிந்து 58,465.89 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.96 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 323.75 புள்ளிகள் சரிந்து 17,441.05 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.82 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் 5.49 சதவிகிதமும், பஜாஜ் பின்சர்வ் 4.69 சதவிகிதமும், ரிலையன்ஸ் 4.42 சதவிகிதமும், என்டிபிசி 3.73 சதவிகிதமும் சரிந்தது.

பார்தி ஏர்டெல் 3.90 சதவிகிதமும், ஏஸியன் பெயின்ட்ஸ் 1.14 சதவிகிதமும், பவர் கிரிட் 0.99 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT