ஸியோமி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் ஸியோமி நிறுவனம் 2018-2021 செப்டம்பர் வரையிலான கடந்த 3 ஆண்டுகளில் 70 லட்சம் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் ’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 8’
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும் ஸியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவி விற்பனையிலும் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் சமீப காலமாக ஸியோமி டிவிக்கள் புதிய விற்பனைத் தளத்தை எட்டியிருப்பதாகவும் உலகளவிலும் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு பெருமையடையச் செய்கிறது என அந்நிறுவனத்தின் இந்திய ஸ்மார்ட் டிவி பிரிவுத் தலைவர் ஈஸ்வரன் நீலகண்டன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் , ரெட்மி டிவி எக்ஸ் 50-இன்ச் , எம்ஐ டிவி 4ஏஏ 32-இன்ச் , எம்ஐ டிவி 5எக்ஸ் 43-இன்ச் போன்ற ஸ்மார்ட் டிவிகளை அதிகம் வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர் எனக் கூறியதோடு ஸ்மார்ட் டிவிக்களின் தொழில்நுட்பத்தை உயர்த்தி திரையில் அதைக் காணும் போது மிகச் சிறந்த அனுபவத்தை ஏற்படுத்துவதே ஸியோமியின் நோக்கம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.