ஐஓஎஸ் முதல் ஆண்ட்ராய்டு வரை: வாட்ஸ்ஆப்பை மாற்ற சாம்சங்கில் புதிய வசதி 
வணிகம்

ஐஓஎஸ் முதல் ஆண்ட்ராய்டு வரை: வாட்ஸ்ஆப்பை மாற்ற சாம்சங்கில் புதிய வசதி

பயனர்கள் தங்களது உரையாடல்களை ஆப்பிள் ஐபோனிலிருந்து சாம்சங் ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றுவதற்கான வசதியை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

பயனர்கள் தங்களது வாட்ஸ்ஆப் உரையாடல்களை ஆப்பிள் ஐபோனிலிருந்து சாம்சங் ஆண்ட்ராய்டு போனுக்கு மாற்றுவதற்கான வசதியை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் பல்வேறு பகுதி மக்களும் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றன. இத்தகைய செயலிகளில் பயனர்களின் தேவைக்கேற்ப புதுப்புது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தங்களது உரையாடல்களை (சாட் ஹிஸ்டரி) ஆப்பிள் ஐபோன் தளத்திலிருந்து சாம்சங் ஆண்ட்ராய்டு தளத்திற்கு மாற்றுவதற்கான வசதியை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் உரையாடல்களை சேமித்து வைத்து பின் மீண்டும் வேறு ஒரு இயங்குதளம் கொண்ட செல்போனுக்கு மாற்றி பயன்படுத்துவது சிக்கலுக்குரிய ஒன்றாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி புதிதாக வரும் சாம்சங் செல்போன்களில் மட்டும் செயல்படும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய உரையாடல்களை மீண்டும் வேறொரு இயங்குதளத்தில் இயக்க, செல்போனின் அமைப்புமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதியைப் பெற பழைய ஐஓஎஸ் போனில் வாட்ஸ்ஆப் வெர்சன் 1.21.160.17 அல்லது புதிய சாம்சங் செல்போனில் வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்டு வெர்சன் 2.21.16.20 இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதி வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு உதவிகரமான இருக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுக்கப்படும் உரிமை!

முதல்வா் ஆவாரா நிதீஷ் குமாா்?

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: நயினாா் நாகேந்திரன்

நிறுத்தத்தை தாண்டி பெண்களை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT