வணிகம்

சரிவை சந்திக்கும் நெட்பிளிக்ஸ்

DIN

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 25 சதவிகிதம் சரிவை சந்தித்தன.

உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிளிக்ஸ் பல்வேறு நாடுகளில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள் ஒருதளத்தில் கிடைப்பதால் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை உள்ளது.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளன. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வெகுவாக மக்களின் செல்வாக்கைப் பெற்ற நெட்பிளிக்ஸ் தளத்தின் சரிவு அதன் வர்த்தகத்தை பாதித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப் பகுதியில் மட்டும் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அந்நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  6 ஆண்டுகளில் முதன்முறையாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் சரிவை சந்தித்துள்ளதாகவும்,  உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷியாவிலிருந்து நெட்பிளிக்ஸ் தளம் வெளியேறியதும் இந்த சரிவிற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மட்டும் ரஷியாவிலிருந்து வெளியேறியதால் 7 லட்சம் சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் இழந்துள்ளது. மேலும் ஏப்ரல் - ஜூன் காலப்பகுதியில் உலகம் முழுவதும் மேலும் 20 லட்சம் சந்தாதாரர்களை இழக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 

சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைவானது அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பயனர்களை அடைவதற்கும், ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்களை தக்க வைக்கவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 221.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT