முகப்பு
வணிகம்

காளை ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: நிஃப்டி 17,500 புள்ளிகளைக் கடந்தது

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.

இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் அறிக்கைகளும் பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இன்றைய  வர்த்தகம் கவனிக்கப்பட்டு வந்தநிலையில் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (ஜன.31) 58,014.17 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,672.86 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  848.40 புள்ளிகள் உயர்ந்து 58,862.57 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,339.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,529.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 237 புள்ளிகள் அதிகரித்து 17,576.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →