வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79 ஆக சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.03 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.03 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டாலா் முதலீடு தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்ரும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு 78.85-ஆக இருந்தது. இது, வரலாறு காணாத குறைந்தபட்ச அளவாகும் என செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், இன்று மேலும் 18 காசுகள் விழ்ச்சியடைந்து  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.79.03 ஆக வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT