ரெப்போ வட்டியில் மாற்றம்: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிவு
ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன.
ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,306.96 புள்ளிகள் சரிந்து 55,669.03 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 2.29 சதவிகிதம் சரிவாகும்.
படிக்க | ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு: தனிநபர், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது
Advertisement
Advertisement
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 391.50 புள்ளிகள் சரிந்து 16,677.60 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 2.29 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 3 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக பவர் கிரிட் 2.75 சதவிகிதமும், என்டிபிஎசி 0.73 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 0.17 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டன.
பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டைட்டன் கம்பெனி, இந்துஸ்இண்ட் எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.