வணிகம்

மேம்படுத்தப்பட்ட புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160, 180 அறிமுகம்

இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார், அதன் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டின் மாடல்களை வெளியிட்டு சந்தையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

DIN

சென்னை: இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார், அதன் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டின் மாடல்களை வெளியிட்டு சந்தையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

பல அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 160சிசி (அடிப்படை மாறுபாடு) ரூ.1.17 லட்சமாகவும், 180சிசி பேஸ் வேரியண்ட்டுக்கு ரூ.1.30 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்-புது தில்லி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக் தற்போது எடை குறைவாகவும் அதிக திறன் கொண்ட பைக்காகவும் உருமாறியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 மோட்டார் சைக்கிள் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 

  • ட்ரம் வேரியண்ட் 1,17,790 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை.
  • டிஸ்க் வேரியண்ட் 1,21,290 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)  விலை.
  • டிஸ்க் - புளூடூத் மாடல் 1,24,590 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த பைக் எடை குறைவாகவும் அதிக திறன் கொண்ட பைக்காகவும் உள்ளது. 

டி.வி.எஸ். அப்பாச்சி வகைகள் டி.வி.எஸ். ரேசிங் பாரம்பரியத்தின் அடிப்படையில், வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் ஒரு சிறந்த தயாரிப்பினையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக டி.வி.எஸ். மோட்டார் ஹெட்-பிசினஸ் (பிரீமியம்) விமல் சம்ப்லி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

பொருத்தம்... அருள்ஜோதி ஆரோக்கியராஜ்!

ஆப்கன் நிலநடுக்கம்: 1,450-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

SCROLL FOR NEXT