வணிகம்

இரட்டிப்பானது மகாராஷ்டிர வங்கி நிகர லாபம்

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைப் போல் 2 மடங்குக்கும் மேலாக வளா்ச்சியடைந்துள்ளது.

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைப் போல் 2 மடங்குக்கும் மேலாக வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021-22-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் (2022 ஜனவரி-மாா்ச்) வங்கியின் நிகர லாபம் ரூ.355 கோடியாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் (2023 ஜனவரி-மாா்ச்) வங்கி ரூ.840 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 2 மடங்குக்கும் மேலாகும்.

அதே போல், மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,949 கோடியிலிருந்து ரூ.5,317 கோடியாகவும், வட்டி வருவாய் ரூ.3,426 கோடியிலிருந்து ரூ.4,495 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT