வணிகம்

ஏறு முகத்தில் அதானி பவர் பங்குகள்!

அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 83.3 சதவிகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் உயர்ந்தது.

DIN

புதுதில்லி: அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 83.3 சதவிகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 3 சதவிகிதம் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 2.69 சதவிகிதம் உயர்ந்து ரூ.274.90-ஆக நிலைபெற்றது. இது ஒரே நாளில் 4.59 சதவிகிதம் உயர்ந்து ரூ.280-ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் 3 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.275.90 ஆக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் 22.40 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 1.73 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.

அதானி பவர் லிமிடெட் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 83.3 சதவிகிதம் அதிகரித்து ரூ.8,759.42 கோடியாக உள்ளது.

கடந்த 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ.4,779.86 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.15,509 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.18,109.01 கோடியானது.

முதல் காலாண்டில் நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவற்றுக்கு முந்தைய ஒருங்கிணைந்த வருவாய் ரூ.10,618 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் ரூ.7,506 கோடியுடன் ஒப்பிடும்போது 41.5 சதவிகிதம் அதிகமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக உயர்த்தி கணிப்பு: ஐஎம்எஃப்

குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த விமானப் படை வீரர்!

சிங்கப்பூரிடம் தோல்வி! ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா!

இருளும் அழகே அவள் பார்வையில்... அனு!

ஆஸி. உடனான தோல்வியிலிருந்து இந்தியா வெளியே வரவேண்டும்: மிதாலி ராஜ்

SCROLL FOR NEXT