இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) 65,539.42 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) காலை 65,503.85 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், 388.40 புள்ளிகள் குறைந்து 65,151.02 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 99.75 புள்ளிகள் குறைந்து 19,365.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
டைட்டன், பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் பேங்க், சன் பார்மா, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, எம் & எம், ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன.
இதையும் படிக்க | குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.