வணிகம்

18,000 பேர் பணிநீக்கம்! அமேசானுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி இழப்பு!

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,330 கோடி. 

DIN

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,330 கோடி. 

இணையதள சில்லறை வணிக சேவையில் ஈடுபட்டு வரும் அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஆண்டில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமேசான் குறிப்பிட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்தவர்களும் இந்த பணிநீக்கம் செய்யப்படுவோர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்டோா் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனா். இதில் பணிநீக்கம் செய்யப்படுவோா் விவரம் 18-ஆம் தேதி தெரியவரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டதன் எதிரொலியாக அமேசான் நிறுவனத்துக்கு ஒரே நாளில் 5330 கோடி (675 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில், 6வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்துக்கு 834 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT