ட்விட்டர் செயலிக்கு போட்டியாக திரெட்ஸ் என்ற செயலியை மெட்டா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். முக்கியமாக ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ பெற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், ட்விட்டர் பயனாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சந்தாதாரராக மாற்றும் முனைப்பில் ட்விட்டர் நிறுவனம் செயல்படுவதாக விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, திரெட்ஸ் என்ற புதிய செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் கணக்கின் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி திரெட்ஸ் செயலியை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரை போன்று திரெட்ஸில் எழுத்துகளால் தங்களின் கருத்துகளை பதிவு செய்ய முடியும். பிற கணக்குகளை பின்தொடரலாம். 500 எழுத்துகள் வரை பதிவிட முடியும்.
மேலும், புகைப்படங்களும், 5 நிமிடம் வரை விடியோக்களையும் திரெட்ஸில் பதிவு செய்ய முடியும்.
இந்நிலையில், திரெட்ஸ் செயலி அறிமுகமாகி 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இதனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ட்விட்டரில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வரும் சூழலில், மெட்டாவின் ‘திரெட்ஸ்’ சமூக ஊடக பயன்பாட்டாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.