வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 48 சதவிகிதம் உயர்வு!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம், 48 சதவீதம் அதிகரித்து ரூ.347 கோடி உள்ளது.

DIN

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம், 48 சதவீதம் அதிகரித்து ரூ.347 கோடி உள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் முந்தைய ஆண்டின் நிகர லாபம் ரூ.235 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.1,412 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,708 கோடியானது. அதே வேளையில் நிறுவனத்தின் வட்டி வருமானம் ஜூன் 2022ல் ரூ.1,299 கோடியிலிருந்து ரூ.1,667 கோடியாக அதிகரித்துள்ளது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் ரூ.1,101 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,261 கோடியானது.

காலாண்டு முடிவில் மொத்த வாராக் கடன் 6.35 சதவிகிதத்திலிருந்து 3.76 சதவீதமாகக் குறைந்ததால் நிறுவனத்தின் சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது. இதேபோல் வாராக் கடன்கள் முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 4.26 சதவீதத்திலிருந்து 2.58 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வங்கியின் மூலதனப் விகிதம் 2022 ஜூன் இறுதியில் 23.91 சதவிகிதத்திலிருந்து 29.93 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT