கோப்புப் படம் 
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு; ஐ.டி. மற்றும் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

சென்செக்ஸ் 16.09 புள்ளிகள் உயர்ந்து 81,526.14 புள்ளிகளிலும், நிஃப்டி 31.75 புள்ளிகள் உயர்ந்து 24,641.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

DIN

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள், அமெரிக்க பணவீக்க தரவுகளுக்காகவும், இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு தரவுகளுக்காகவும் காத்திருந்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்றே உயர்ந்து முடிந்தது.

இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 16.09 புள்ளிகள் உயர்ந்து 81,526.14 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31.75 புள்ளிகள் உயர்ந்து 24,641.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்று 2,053 பங்குகள் ஏற்றத்திலும், 1,772 பங்குகள் சரிந்தும், 109 பங்குகள் விலை மாற்றமின்றி வர்த்தகமானது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே இந்தியா, பஜாஜ் பின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், மாருதி, பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தது முடிந்தது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ், என்.டி.பி.சி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டைட்டன் மற்றும் எச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

இதையும் படிக்க: பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு வரத்து

இன்போசிஸ் மற்றும் எல்டிஐ-எம்ட்ரீ ஆகிய நிறுவன பங்குகள் 0.3 சதவிகிதம் வரை உயர்ந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்டார்ஹப் கூட்டு நிறுவனமான இன்போசிஸ் காம்பாஸ் தனது ஒத்துழைப்பை வலுப்படுத்திய பிறகு இன்போசிஸ் பங்குகள் சுமார் 1 சதவிகிதம் வரை உயர்ந்தன.

மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவற்றின் வலுவான செயல்திறனால் உந்தப்பட்ட நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்தது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் சியோல் உயர்ந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் இன்று கலவையான குறிப்பில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்கிழமை) சரிந்து முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.98 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.90 டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,285.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT