பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது!!
வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,212.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 10.46 மணியளவில், சென்செக்ஸ் 1,079.44 புள்ளிகள் குறைந்து 80,210.52 புள்ளிகளில் இருந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 330.55 புள்ளிகள் குறைந்து 24,218.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது.
இதன்பின்னர் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. காலை 11.55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 283.16 புள்ளிகள் குறைந்து 81,006.80 புள்ளிகளிலும் நிஃப்டி 90.40 புள்ளிகள் குறைந்து 24,458.30 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது.
சென்செக்ஸ் பொருத்தவரை டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்&டி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.