சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை 
வணிகம்

தடுமாறும் நிறுவனங்கள்: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தைகள்!

மும்பை பங்குச் சந்தை 1,176.46 புள்ளிகள் சரிந்து 78,041.59 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 375.05 புள்ளிகள் சரிந்து 23,576.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

DIN

மும்பை: வட்டி விகிதங்கள் மீதான ஃபெடரல் ரிசா்வின் அறிவிப்பும், தொடர்ந்து அந்நிய நிதி வெளியேறி வருவதால் தடுமாறும் நிறுவனங்களாலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியும் இன்றும் சரிந்து நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.08 புள்ளிகள் சரிந்து 79,003.97 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.8 புள்ளிகள் குறைந்து 23,887.90 புள்ளிகளாக இருந்தது.

வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 1,176.46 புள்ளிகள் சரிந்து 78,041.59 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 375.05 புள்ளிகள் சரிந்து 23,576.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

இதையும் படிக்க: சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 8% உயா்வு

இன்றைய டாப் 30 ப்ளூ சிப் பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஐ.டி.சி, லார்சன் & டூப்ரோ, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி சரிந்து முடிந்தது. அதே வேளையில், டைட்டன், என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ரியாலிட்டி குறியீடு 4 சதவிகிதமும், ஆட்டோமொபைல், ஐடி, கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல், டெலிகாம், பொதுத்துறை வங்கி ஆகியவை தலா 2 சதவிகிதமும் வரை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் சியோல் சரிந்தும், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சற்று உயர்ந்து முடிந்தது. வால் ஸ்ட்ரீட் நேற்று (வியாழகிழமை) ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.69 சதவிகிதம் குறைந்து 72.38 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT