மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
முதலீட்டாளர்கள் இன்று டெக் மற்றும் உலோக துறை சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்ததால் சென்செக்ஸ் 1,292.92 புள்ளிகள் வரை அதிகரித்தது.
ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளிலும் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்ததாலும் தொடர் ஐந்து நாள் இழப்புகளிலிருந்து மீண்டது சென்செக்ஸ்.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,292.92 புள்ளிகள் உயர்ந்து 81,332.72 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,387.38 புள்ளிகள் உயர்ந்து 81,427.18 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 428.75 புள்ளிகள் உயர்ந்து 24,834.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 4.51 சதவிகிதம் உயர்ந்தது. அதானி போர்ட்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது. நெஸ்லே பங்குகள் 0.07 சதவிகிதம் சரிந்து வர்த்தகமானது.
ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. டோக்கியோ சந்தை சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமையன்று) பெரும்பாலும் சரிந்து முடிவடைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.40 சதவிகிதம் குறைந்து 82.04 அமெரிக்க டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமையன்று) ரூ.2,605.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களில், பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 1,303.66 புள்ளிகள் சரிந்ததும், நிஃப்டி 394.75 புள்ளிகள் சரிந்ததுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.