வணிகம்

யுபிஐ செயலியாக தொடரும் பேடிஎம்: புதிய முகவரிகள்!

வங்கி இணைப்பின் மூலம் செயல்பாட்டைத் தொடரும் பேடிஎம்

DIN

பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) அனுமதி அளித்துள்ளது.

நான்கு வங்கிகளுடன் இணைந்து 5 கையாளும் முகவரிகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் யுபிஐ செயலியாக பேடிஎம் செயல்படவுள்ளது.

முந்தைய பின்னொட்டு முகவரியான @பேடிஎம் மூலம் செயல்படுத்தப்படும் பரிவர்த்தனைகள் யெஸ் வங்கிக்கு திருப்பி விடப்படும். பயனர்கள் இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. புதிய முகவரியாக @பிடியெஸ் என்கிற பின்னொட்டு செயல்படும்.

நான்கு வங்கிகள் முறையே ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ், யெஸ் பேங்க் பேடிஎம் செயலிக்கான பண பரிவரித்தனைகள் கட்டமைப்பு வழங்குநர்களாக செயல்படவுள்ளன.

ஹேண்டில்கள் @பிடிஹெச்டிஎஃப்சி, @பிடிஎஸ்பிஐ ஆகியவற்றுக்கு தேசிய பரிவர்த்தனைகள் கழகம் அனுமதியளித்த போதும் அவை உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT