முகப்பு
கோப்புப் படம்
வணிகம்

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,200 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

வணிகம்

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,200 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:34 PM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,190 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

ஆட்டோ, வங்கி, ஐடி, நுகர்வு பொருள்கள், மெட்டல், பார்மா, எனர்ஜி துறை பங்குகள் 0.3 - 2% வரை சரிந்தது. பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 1% வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 1,190.34 புள்ளிகள் சரிந்து 79,043.74 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.48 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 360.75 புள்ளிகள் சரிந்து 23,914.15 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.49 சதவீதம் சரிவாகும்.

ஒரு நிறுவனப் பங்கு மட்டும் உயர்வு

வணிக நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் உயர்ந்து 80,281.64 புள்ளிகளுடன் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 80,447.40 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. எனினும் பிற்பாதியில் சரியத் தொடங்கி அதிகபட்சமாக 78,918.92 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 1,190 புள்ளிகள் சரிந்து 79,043 புள்ளிகளாக நிறைவுபெற்றது.

சென்செக்ஸ் பட்டியல் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஒரே ஒரு நிறுவனத்தின் பங்கு மட்டுமே உயர்ந்திருந்தது. எஞ்சிய 29 நிறுவனப் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக எம்&எம் -3.54%, இன்ஃபோசிஸ் -3.53%, பஜாஜ் ஃபைனான்ஸ் -2.93%, அதனி போர்ட்ஸ் -2.70%, எச்.சி.எல். டெக் -2.66%, டெக் மஹிந்திரா -2.48%, டைட்டன் கம்பெனி -2.41%, டிசிஎஸ் -2.03% சரிவுடன் இருந்தன. எஸ்பிஐ நிறுவனப் பங்குகள் மட்டும் 0.57% உயர்ந்திருந்தது.

வணிக நேரத் தொடக்கத்தில் 24,274.15 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,345.75 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் சரியத் தொடங்கி, அதிகபட்சமாக 23,873.35 புள்ளிகள் வரை சரிந்தது.

வணிக நேர முடிவில் 360 புள்ளிகள் சரிந்து 23,914 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி நிலவரம்

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் அதானி கேஸ் நிறுவனப் பங்குகள் 15.80% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக அதானி கிரீன் 10.00%, அதானி டிரான்ஸ்மிஷன் 10.00%, ஹோசனா கன்சியூமர் 10.00%, ஜே.பி. பவர் 8.99%, ஐடிஐ லிமிட்டெட் 7.28%, அதானி பவர் 7.26% சரிந்திருந்தது.

இதேபோன்று ஆம்பர் என்டர்பிரைசஸ், எஸ்பிஐ லைஃப், திரிவேணி டர்பைன், டாடா டெலிசர்வீசஸ், ரெயின்போ சில்ட்ரன்ஸ், மேக்ஸ் ஃபைனான்சியல், எம்&எம், இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

துறை ரீதியாக....

ஆட்டோ, வங்கி, ஐடி, நுகர்வு பொருள்கள், மெட்டல், பார்மா, எனர்ஜி துறை பங்குகள் 0.3 - 2% வரை சரிந்தது. பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 1% வரை உயர்ந்தது. மீடியா பங்குகள் 0.3% ஏற்றம் கண்டன.

இந்திய பங்குச் சந்தையைப் போன்று சியோல், டோக்கியோ பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தையும் நேர்மறையாகவே முடிந்தது. ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தை சரிவுடன் இருந்தன.

இதையும் படிக்க | டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

முழு கட்டுரையைப் படிக்க →