வணிகம்

எல் & டி ஃபைனான்ஸ் லாபம் ரூ.696 கோடியாக அதிகரிப்பு

எல் & டி பைனான்ஸின் வரிக்குப் பிந்தை லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.696 கோடியாக அதிகரித்துள்ளது.

Din

இந்தியாவின் வங்கி அல்லாத முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எல் & டி பைனான்ஸின் வரிக்குப் பிந்தை லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.696 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.696 கோடியாக உள்ளது. அதே போல், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த கடனளிப்பு கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட 28 சதவீதமும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டைவிட (ஏப்ரல்-ஜூன்) 18 சதவீதமும் அதிகரித்து ரூ.88,975 கோடியாக உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் சில்லறைக் கடனளிப்பு 12 சதவீதம் அதிகரித்து ரூ.15,092 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT