FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஐபிஎல் ரசிகர்களுக்காக... ஒரு ரூபாய்க்கு 1 ஜிபி! பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு!!

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவை...

Updated On : 2 ஏப்ரல் 2025, 6:02 pm IST
பிஎஸ்என்எல்
பகிர்:

ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், ஒரு ரூபாயில் இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்கிவரும் ரீசார்ஜ் திட்டங்களைவிட பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையிலேயே திட்டங்களை அறிவித்து வருகின்றன.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர்.

நாடு முழுவதும் 4-ஜி இணைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிதாக 75,000 கோபுரங்களை பிஎஸ்என்எல் அமைத்து வருகிறது.

4-ஜி சேவைக்குப் பிறகு பல்வேறு விலைகளில், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.

அந்தவகையில் ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில், புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது, ரூ. 251-க்கு 251 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 60 நாள்கள்.

ஐபிஎல் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், கோடிக்கணக்கான ரசிகர்கள் செல்போன்கள் மூலமே கிரிக்கெட்டை கண்டுவரும் நிலையில், அவர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தத் திட்டம் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

இதையும் படிக்க | செல்போனை ரீசார்ஜ் செய்தால் இலவசமாக ஐபிஎல் பார்க்கலாம்! எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments