முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 11 ஏப்ரல், 2025 at 10:54 AM
- ANI
பகிர்:

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் வெள்ளிக்கிழமை காலை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பைத் தொடா்ந்து அதிகரித்து வரும் வா்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையும் எதிா்மறையாகச் செயல்பட்டு வந்தன.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை பங்குச் சந்தை இயங்காத நிலையில், புதன்கிழமை மாலை நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்திருந்தன.

Advertisement

இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி குறியீடு 460 புள்ளிகள் மற்றும் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கின.

தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 1,187 புள்ளிகள் அதிகரித்து 75,034.99 புள்ளிகளுடனும் நிஃப்டி 383 புள்ளிகள் அதிகரித்து 22,782.55 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகின்றன.

ஐடி, பார்மா நிறுவனங்களின் நிஃப்டி பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.