படம்: ஹோண்டா வலைதளம். 
வணிகம்

ஹோண்டாவின் ஏப்ரல் மேளா: எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?

ஹோண்டா கார்களுக்கு அளிக்கப்படும் தள்ளுபடி பற்றி...

DIN

ஹோண்டா கார் நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி விலையை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ. 76,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஹோண்டா எலிவேட் இசட்எக்ஸ் (Elevate ZX) வகை காருக்கு அதிகபட்சமாக ரூ. 76,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் ஷோரூம் விலை ரூ. 11.91 லட்சமாகும்.

ஹோண்டா சிட்டி  எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வகை கார்களுக்கு ரூ. 63,300 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், ஹோண்டா சிட்டியின் எஸ்வி வகை காரின் ஷோரூம் விலை ரூ. 12.28 லட்சம்.

சிட்டி இ: எச்இவி (City e:HEV) இசட்எக்ஸ் வகை காருக்கு ரூ. 65,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் ஷோரூம் விலை ரூ. 20.75 லட்சம.

ஹோண்டா அமேஸ் இரண்டாம் ஜெனரேசன் காருக்கு ரூ. 57,200 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஷோரூம் விலை ரூ. 7.63 லட்சமாகும்.

இந்த தள்ளுபடிகள் அனைத்தும் ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டவை. டீலர்கள், இடத்துக்கு ஏற்ப தள்ளுபடி விலை மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT