நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 4,440 5ஜி இணைய சேவைக்கான நிலையங்கள் (கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் புதிதாக 5ஜி இணைய சேவை வழங்குவதை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரம்பக்கட்டத்தில் மும்பையில் முழுவதுமாக 5ஜி நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று, முழு வீச்சில் 5ஜி சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது.
இதோடு மட்டுமின்றி 11 கிரிக்கெட் விளையாட்டுத் திடல்களிலும் 5ஜி நிலையங்களை அமைத்து இணைய சேவையை வழங்குகிறது.
மும்பையைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் 5ஜி இணைய சேவையை வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஏற்கெனவே கோலோச்சிவரும் ஏர்டெல்லும், ரிலையன்ஸ் ஜியோவும் 5ஜி இணைய சேவையை பரவலாக்கி வருகின்றன. குறிப்பாக பயனர்களின் இணைய பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், உள்புற 5ஜி நிலையங்களை அமைத்து வருகிறது.
செல்போன் கோபுரங்களை அமைத்துவரும், இந்தஸ் டவர் நிறுவனமும் உள்புற 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது,
இதனிடையே கடந்த மார்ச் மாத்தில் மட்டும் 4,440 5ஜி நிலையங்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 48,988 5ஜி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 30,999, கர்நாடகத்தில் 31,454 கோபுரங்கள், ராஜஸ்தானில் 28,056, பிகாரில் 24,289, ஹரியாணாவில் 17,440, தில்லியில் 12,334, ஒடிஸாவில் 12,939 5ஜி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.